புரட்சி நாயகன் பவுல்
இறைஒளி பெற்றவர் புதுவழி கண்டவர்
புரட்சி நாயகன் பவுல் வாழ்கவே - அவர்
அருள்துணையில் நம் இல்லம் வாழ்கவே!
பணிவாழ்வில் நம் இல்லம் வளர்கவே!
இயேசுவின் செய்தியை இலட்சியமாக்கி - ஆ... ஆ... ஆ...
எல்லாம் அவரென பணியினை ஏற்று - ம்.. ம் ம்..
இயேசுவின் செய்தியை இலட்சியமாக்கி
எல்லாம் அவரென பணியினை ஏற்று
பேச்சிலும் மூச்சிலும் அவர் மயமாகி - (இருமுறை)
பேரின்பவாழ்க்கையைப் பிறருக்குத் தந்தவர்
பவுலின் பெருமைபாடுவோம் - அவர்
பாதை நாமும் செல்லுவோம் - (இருமுறை)
மொழிகளும் இனங்களும் இடங்களும் கடந்து - ஆ... ஆ... ஆ...
இறைவனின் அன்புக்குச் சான்றெனத் திகழ்ந்து - ம்... ம்....ம்...
மொழிகளும் இனங்களும் இடங்களும் கடந்து
இறைவனின் அன்புக்குச் சான்றெனத் திகழ்ந்து
விடுதலைப் பணியில் விழுமியம் தேடி - (இருமுறை)
மீட்பின் செய்தி பரவிடச் செய்தவர்
பவுலின் பெருமைபாடுவோம் - அவர்
பாதை நாமும் செல்லுவோம் - (இருமுறை)